Connect with us

குழப்பத்தை கொடுத்த வீட்ல விசேஷம் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் நாளை வெளியீடு!!

veedula veshesham

Entertainment

குழப்பத்தை கொடுத்த வீட்ல விசேஷம் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் நாளை வெளியீடு!!

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு வித்தியாசமான திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதன்படி வீட்டில் விசேஷம் திரைப்படத்தின் ட்ரெய்லர் 2 நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளார். பெற்றோர்களாக நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகை ஊர்வசி நடித்துள்ளனர். இந்த நிலையில் கல்யாண வயதில் உள்ள இளைஞன் வீட்டில் அவரது தாயார் கர்ப்பமாக இருப்பது போல் படத்தின் கதை இருக்கும் என்று ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது.

ஏனென்றால்  ட்ரெய்லரில் நடிகை ஊர்வசி கர்ப்பமாக இருந்தார். இதனால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு திரைப்படம் நகர்வது போல் தெரிகிறது.

மேலும் குழப்பங்களும் அதிகமாக காணப்படும் என்று ட்ரெய்லரை பார்க்கும்போது தெரிகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் டாடி சாங் நாளைய தினம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு வீட்டில் விசேஷம் திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியாகிறது. மேலும் படம் ஜூன் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top