ஆபாச பேச்சு, கொலைமிரட்டல்… பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் மீது வழக்குப்பதிவு!

நடிகை காயத்ரி ரகுராம் மற்றும் பாஜகவை சேர்ந்த 150 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது. பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் மற்றும் 150 பேர் மீது கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 சட்டவிரோதமாக கூடுதல் 148 ஆயுதங்களுடன் கூடுதல் 324 காயம் விளைவித்தல், 294b ஆபாசமாக பேசுதல் 506( 2 )கொலை மிரட்டல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே 5 பிரிவுகளின் கீழ் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சாலை மறியலில் ஈடுபட்ட இதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் 50 பேர் மீதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் 30 பேர் மீதும் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாஜகவினர் புகாரில் விசிகவினர் மீதும், விசிகவினர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாலை மறியலில் ஈடுபட்டதாக இரு கட்சிகள் மீதும் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment