‘தமிழ்நாடு வாழ்க’… ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் பெரும்முழக்கம்!

2023ம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. சட்டப்பேரவை கூட்டத்தொடரைப் பொறுத்தவரை மரபுப்படி ஆளுநர் உரையுடன் இன்றைய கூட்டத்தொடர் ஆரம்பமானது.

ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் வணக்கம் எனக்கூறியதுமே, ‘தமிழ்நாடு வாழ்க’, ‘எங்கள் நாடு தமிழ்நாடு’ என முழுக்கமிட்டு ஆளுநருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

சட்டப்பேரவையில் தன்னுடைய உரையுடன் ஆளுநர் தொடங்கும் போது, ‘தமிழ்நாடு வாழ்க’, ‘ஆளுநரை கண்டிக்கிறோம்’ என திமுக கூட்டணி கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர்.

அத்துடன் ஆளுநரை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, த.வா.க உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பாமக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் முன்பாக கையில் பேப்பரில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பினர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.