கிராமத்து ஸ்டைல் வத்தல் குழம்பு! எப்படி செய்யனு தெரியுமா?

கிராமத்து சமையல் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும், அதிலும் வத்த குழம்பு என்றால் அனைவரின் வாயில் எச்சில் தான் ஊறும்.

தேவையான பொருள்கள் இதோ :

மாவற்றல் – 5,
கத்தரி வற்றல் – 10,
கொத்தவரை வற்றல் – 12,
சுண்டைக்காய் வற்றல் – சிறிது பொறித்து எடுத்து கொள்ளவும்,
பெரிய வெங்காயம் – ஒன்று (அ) சின்ன வெங்காயம் – 10,
குழம்பு பூண்டு – 10 பல்,
வற்றல் குழம்பு பொடி (அ) மிளகு சீரகப் பொடி – 3 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – கால் கரண்டி,
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி,
மல்லித் தூள் – 3 தேக்கரண்டி,
புளி – சிறிய எலுமிச்சை அளவு, கரைத்து வைத்து கொள்ளவும்.
தேங்காய் பால் – ஒரு கப் ,
வடகம் – சிறிது,
கறிவேப்பிலை – சிறிதளவு ,
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
உப்பு – தேவைக்கு ஏற்ப

உலர்ந்த அத்திப்பழம் தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ !

செய்முறை இதோ:

முதலில் அனைத்து வற்றலையும் ஊறவைக்கவும்.வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.புளியைக் கரைத்து, அதனுடன் உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி வடகம், பூண்டு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.அதனுடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் வற்றல் குழம்பு பொடி, மற்ற தூள் வகைகள் சேர்த்து சிறு தீயில் வைத்து வதக்கவும்.அதனுடன் ஊறவைத்த வற்றலைப் பிழிந்துவிட்டு போட்டு சுருள வதக்கவும்.

தூங்கும் போது செல்போனை தலை அருகில் வைத்து தூங்க கூடாது! காரணம் தெரியுமா?

பிறகு தேங்காய் பால் மற்றும் புளிக்கரைசல் ஊற்றி கொதிக்கவிடவும்.குழம்பு கொதித்து கெட்டியாகி எண்ணெய் மேலே வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.(விரும்பினால் அவித்த முட்டை சேர்க்க்லாம்).சுவையான வற்றல் குழம்பு தயார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment