வெற்றிமாறனுக்கு முன்பாக வாடிவாசல் படத்தை அந்த பிரபல இயக்குநர் இயக்க நினைத்தாரா?.. வசந்தபாலன் பேட்டி!

சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கப் போவதாக ஆண்டுகளுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும் அந்த படத்திற்காக நடிகர் சூர்யா காளை மாடுகளுடன் பயிற்சி பெற்று தகவல்கள் வெளியாகின. ஆனால், வாடிவாசல் படத்தை சூர்யா இன்னமும் ஆரம்பிக்கவில்லை.

லிங்குசாமி வாடிவாசல் படம் பண்ண நினைச்சாரு?:

அதற்கு பதிலாக கங்குவா படத்தில் நடித்து வந்த சூர்யா அந்தப் படத்தின் முழு படப்பிடிப்பை முடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். மேலும், தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இதற்கு இடையே சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் அந்த படமும் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டது.

நடிகர் சூர்யா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்துவிட்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவை வைத்து கடந்த ஆண்டு தீபாவளிக்கு மிகப்பெரிய வெற்றி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அந்த படத்திலிருந்து சூர்யா வெளியேறி விடுவார் என்றும் கூறுகின்றனர். சூர்யாவுக்கு பதிலாக ராம் சரணை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கவும் வெற்றிமாறன் திட்டமிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால் வாடிவாசல் படத்தின் கதை தனக்கு பிடிக்கவில்லை என ராம்சரண் வெற்றிமாறனிடம் கூறிவிட்டதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன.

வசந்தபாலன் வெப்சீரிஸ்:

தலைமைச் செயலகம் வெப் சீரிஸ் மூலம் அனைவரது கவனத்தையும் மீண்டும் கவர்ந்த அங்காடித் தெரு படத்தின் இயக்குனர் வசந்தபாலன் ஒரு காலத்தில் தானே வாடிவாசல் படத்தை இயக்க நினைத்ததாகவும் அந்தப் படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது ஜல்லிக்கட்டு தவிர்த்து படத்தில் ஒன்றுமில்லை என்னை நினைத்து அந்த படத்தை இயக்குவதை கைவிட்டு விட்டேன் என கூறியுள்ளார்.

மேலும், சூர்யாவை வைத்து அஞ்சான் படத்தை இயக்கிய லிங்குசாமி வாடிவாசல் படத்தை இயக்க வேண்டும் என பெரிதும் ஆர்வம் காட்டி வந்தார் என்றும் கடைசியாக தற்போது வெற்றிமாறன் அந்த படத்தை இயக்கப் போகிறார் என்றும் வசந்தபாலன் கூறியுள்ளார்.

அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன், ஜெயில், அநீதி உள்ளிட்ட படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கத்தில் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள தலைமைச் செயலகம் வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை அள்ளி வருகிறது. ஆடுகளம் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத், தர்ஷா குப்தா, பிக் பாஸ் நிரூப், சந்தானபாரதி, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் அந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...