Entertainment
வசந்த பாலன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்
வெயில் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது ஜெயில் படத்தை இயக்கி வருபவர் வசந்த பாலன். இயக்குனர் ஷங்கர், பாலச்சந்தர் முதலியவர்களின் பட்டறையில் வளர்ந்த வசந்தபாலனின் படங்கள் ஒவ்வொன்றும் அருமையானவை மென்மையானவை.

முதல் படம் ஆல்பம் மட்டும் இவருக்கு கை கொடுக்கவில்லை.
வசந்தபாலன் தற்போது இயக்கி வரும் ஜெயில் படத்தை முடித்து விட்டு புதிதாக விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்குகிறார்.
விஷ்ணு விஷால் தற்போது மிக முன்னணியான ஹீரோவாகி விட்டார். அவரின் ராட்சஷன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டதுதான்.
ஜெயில் படத்தை முடித்து விட்டு விஷ்ணு விஷாலுடன் இணையும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
இந்த திரைப்படத்தை பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கிறது.
