நீண்ட நாள் காதலியை கரம் பிடிக்கும் பிரபல நடிகர்!!!

1131f3117d7bc1c40334388999225ba0

பாலிவுட் நடிகர் வருண் தவான் தன்னுடைய காதலி நடாஷா தலாலை வருகின்ற 24-ம் தேதி மணக்க உள்ளார். ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தின் வழியாக பாலிவுட்டில் அறிமுகமான வருண் தவான் தொடர்ந்து பட்லாபூர், ஏபிசிடி 2, தில்வாலே, ஸ்ட்ரீட் டான்ஸர் என பல்வேறு ஹிட் படங்களை அளித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

இந்த நிலையில் தன்னுடைய நீண்டநாள் காதலி நடாஷாவை வருண் திருமணம் செய்யவிருக்கிறாராம்.

இந்த தகவலை வருணின் சித்தப்பாவும், நடிகருமான அனில் தவான் உறுதிப்படுத்தி இருக்கிறார். தெற்கு மும்பையில் உள்ள அலிபாக்கில் வருகின்ற 24-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மிகக்குறைந்த நபர்களே கலந்து கொள்ள இருக்கிறார்களாம். வருண் தவான் தற்போது ஜக் ஜக் ஜீயோ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.