வாரிசு VS துணிவு: ஜன.13,13,15,16ம் தேதிகளில் சிறப்புக்காட்சிகள் ரத்து!

நாளைய தினத்தில் அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு ஆகிய படங்கள் உலகமெங்கும் வெளியாக உள்ளது. இந்நிலையில் 13,14,15 மற்றும் 16 ஆகிய தினங்களில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என விண்ணப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் 2 படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் திரையரங்குகளில் பெரிய அளவில் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

குறிப்பாக தியேட்டர் வளாகங்களில் கட் அவுட்கள், பேனர்கள் மீது பால் ஊற்றி கொண்டாடுவது, 4,5 மணியளவில் சிறப்பு காட்சிகள் வெளியிடுவது போன்ற திட்டங்களில் ரசிகர்கள் இருந்து வந்தனர்.

இந்த சூழலில் பால் அபிஷேகம், அதிகாலை சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பி உள்ளது.

மேலும், இன்று நள்ளிரவு முதல் ரசிகர்களின் கூட்டம் அதிகமாக கூடும் என்ற காரணத்தினால் இவற்றை தவிர்க்கும் பொருட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.