ரயிலில் ஒட்டப்பட்ட வாரிசு ஸ்டிக்கர்கள்.. மர்ம நபர்கள் கிழித்ததால் பரபரப்பு!

தளபதி விஜய் நடித்த வாரிசு ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் திருநாளில் வெளியாக உள்ளது தெரிந்ததே. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பாக சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய புரமோஷன் ரயில்களில் வாரிசு படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது என்பதும் அந்த போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

varisu train1இந்த நிலையில் ரயிலில் ஒட்டப்பட்ட வாரிசு படத்தின் போஸ்டர்களை மர்ம நபர்கள் கிழித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இந்த செயலை அஜித் ரசிகர்கள் தான் செய்திருப்பார்கள் என்று கூறி வருகின்றனர்.

ஆனால் மர்ம நபர்கள் செய்த இந்த செயலுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்றும் இது போன்ற செயலை அஜித் ரசிகர்கள் செய்ய மாட்டார்கள் என்றும் அஜீத் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

லட்சக்கணக்கில் செலவு செய்து ரயிலில் வாரிசு படத்தை புரமோஷன் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்த நிலையில் அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.