பெரும் சோகம்! வாரிசு படத்தின் முக்கிய பிரபல மரணம்..!!

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ளபடம் வாரிசு. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போல் முக்கிய நட்சத்திர பட்டாளங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் 24-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. அதோடு எமோஷன்ல் மற்றும் குடும்பப் படமாக வாரிசு அமைந்துள்ளது.

இதற்காகவே படத்திற்கு தணிக்கை குழு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களும் சென்று பார்க்கலாம். அதே சமயம் வருகின்ற 11-ம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என படங்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வாரிசு படத்தின் புரொடக்‌ஷன் டிசைனராக பணியாற்றிய சுனில் பாபு என்பவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் பாலிவுட்டில் மிகப்பெரிய படங்களில் பணியாற்றியவர்.

அதே போல் கஜினி, துப்பாக்கி, உருமி போன்ற படங்களிலும் புரொடக்‌ஷன் டிசைனராக பணியாற்றி உள்ளார். மேலும், வாரிசு படம் வெளியாகுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் இவரது இழப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.