
பொழுதுபோக்கு
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘வாரிசு’ தயாரிப்பு நிறுவனம் ! வெளியிட்ட அறிக்கை!
விஜய் தற்போழுது வம்சி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான நான்காம் கட்டப்படி பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது .படத்தில் முதல் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் ,அதைத்தொடர்ந்து காமெடி காட்சிகள்,சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.இந்தப் படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, சரத்குமார், ஷாம், ராதிகா, குஷ்பூ என முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன் வாரிசு படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது அடுத்த படத்திற்காக அறிமுக நட்சத்திரங்கள் தேர்வு செய்ய உள்ளதாகவும் அதற்காக விண்ணப்பிக்கலாம் என சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் பரவி வருகிறது,இதனை நம்பி பலரம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இதை அறிந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அதில் எங்கள் நிறுவனம் தயாரித்து வரும் ’ஆர்சி 15’ எஸ்.வி.சி 50’ படங்கள் உள்பட எந்த படத்திற்கும் அறிமுக நடிகர்களை தேர்வு செய்யவில்லை. சமூகவலைத்தளங்களில் பரவி வரும் செய்திகளும் முழுக்க முழுக்க வதந்தி மட்டுமே. அந்த தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் இணைந்த மற்றுமொரு பிரபலம்! யாரு தெரியுமா?
பிரபல தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வந்த இந்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
A note of caution to everyone #RC15 #SVC50 pic.twitter.com/KRPiykeCk2
— Sri Venkateswara Creations (@SVC_official) July 24, 2022
