அடுத்த சிக்கலில் ‘வாரிசு’.. படக்குழுவினருக்கு நோட்டீஸ்!!

தளபதி விஜய் நடிக்கும் வாரிசு பட குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய். இவர் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் வருகின்ற பொங்கலை ஒட்டி வெளியாக உள்ளது.

varisu 1 1

இதன் காரணமாக படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் அனுமதியின்றி யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்துவதாக புகார் எழுந்தது. இதனால் போலீசார் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது யானையை வாகனத்தில் அழைத்துவர மட்டுமே அனுமதி கொடுத்திருக்கும் கடிதம் இருந்ததாகவும், யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்தும் கடிதம் சமர்பிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையில் பூஜைக்காக மட்டுமே யானை அழைத்துவந்ததாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். தற்போது விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் ஒன்றை படக்குழுவினருக்கு அனுப்பியுள்ளனர்.

varisu

அதன் படி, விளக்கம் அளிக்காமல் யானைகளை பயன்படுத்தியதாகவும், இது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் கொடுக்க வேண்டும் என அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாரிசு படத்திற்கு தெலுங்கு உரிமையாளர்கள் மத்தியில் பிரச்சனை இருந்து வரும் நிலையில் தற்போது இத்தகைய விவகாரம் பெரியதாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.