
பொழுதுபோக்கு
வாரிசு ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவா இது.. படப்பிடிப்பில் இருக்கும் வீடியோவா!
இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தளபதி 66’ . இந்த படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த தளபதி 66 படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.
தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் மேலும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், 2ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுவருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை படப்பிடிப்பை வேடிக்கை பார்த்த பொது மக்கள் செல்போன்களில் படமெடுத்து சமுக வலைத்தளங்களில் வெளியிட்டதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.அதனால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டது.
அதனால் தற்காலிகமாக தற்போது குடிசை செட் உருவாக்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில தினங்களில் இந்த படப்பிடிப்பு மீண்டும் தொடங்கபட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படி ஒரு புறம் இருக்க தற்போது வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கியூட்டான வீடியோ ஒன்றை ராஷ்மிகா தனது சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார். ஆனால், இது வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளம் என அவர் அந்த வீடியோவில் குறிப்பிடவில்லை.
அஜித் பைக் டூர் போக வினோத் தான் காரணமா? கதையில் மீண்டும் சொதப்பல்!
தற்பொழுது ராஷ்மிகா விஜய் படத்தில் நடித்து வருவதால் இந்த வீடியோ வாரிசு படப்பிடிப்பு தளம் தான் என ரசிகர்கள் பலரும்,என கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
