வாரிசு படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? கசிந்த தகவல்!

நடிகர் விஜய் தற்போழுது இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு ’ என்ற படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.இந்த படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

தளபதி 66 படத்தில் 6 பாடல்கள் இருப்பதாகவும், இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் அதிகம் இல்லை என கூறப்படிகிறது.விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Varisu Sarathkumar Update

இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதைத்தொடர்ந்து இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். ராஷ்மிகாவுக்கு இந்த படத்தில் அதிக சுயநலம் கொண்டவராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுடன் இணைந்து பாலிவுட் நடிகை நந்தினி ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ஹைதராபாத்தில் வாரிசு திரைப்பட படப்பிடிப்பு நடந்து வர, அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு சென்னை அக்டோபர் மாதம் வர உள்ளனர்.

மீண்டும் சினிமாவுக்கு வந்த நடிகை திவ்யா!

varisu movie release date

அவ்வப்போது இந்த படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகிவரும் நிலையில் தற்போழுது இந்த படத்தை பற்றிய மாஸான தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு அப்டேட்காக ரசிகர்கள் ஆவலாக இருப்பது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment