‘வாரிசு’ விநியோக உரிமை… ரெட் ஜெயன்ட் மூவிஸ்… மாஸ் அப்டேட்!!

தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். அதே போல் சரத்குமார், யோகிபாபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Varisu Sarathkumar Update

இந்நிலையில் வருகின்ற 2023-ம் ஆண்டில் பொங்கலை முன்னிட்டு வெளியாகும் இப்படத்தின் விநியோக உரிமையை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

அதே சமயம் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைப்பெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

vijay varisu movie exclusive update from sarathkumar photos pictures stills 1

தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தின் விநியோக உரிமையை 4 இடங்களில் ‘ரெட் ஜெயன்ட்’ வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, சென்னை, செங்கல்பட்டு, கோவை, ஆற்காடு உள்ளிட்ட 4 இடங்களில் ‘ரெட் ஜெயன்ட்’ வெளியிடுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.