இரண்டு இடங்களில் சொதப்பிவிட்டேன்: விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வம்சி

வாரிசு படத்தில் இரண்டு இடங்களில் சொதப்பிவிட்டேன் என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் விஜய்யின் வாரிசு பட இயக்குனர் வம்சி தெரிவித்துள்ளார்.

முதலாவது ஆக இந்த படத்தில் குஷ்பூவுக்கு மிகவும் நல்ல கேரக்டர் என்றும் அவர் விஜய்யின் சித்தி ஆக நடித்திருந்தார் என்றும் குஷ்புக்காக விஜய் ஒரு ஆக்சன் காட்சியிலும் நடித்திருந்தார் என்றும் அந்த காட்சி 17 நிமிடங்கள் கொண்டது என்றும் கூறிய வம்சி அந்த காட்சியை படத்தின் நீளம் வருதே கட் செய்யப்பட்டு விட்டதாக கூறினார். இருப்பினும் இந்த காட்சி டெலீட் காட்சியாக விரைவில் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் விஜய்யின் எண்ட்ரி பாடல் மாஸாக ஒவ்வொரு பாடத்திலும் இருக்கும் நிலையில் இந்த படத்தில் சுமாராக இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தார்கள். அதற்கு முழுக்க முழுக்க காரணம் நான் தான். இந்த பாடல் ஒரு ட்ராவல் பாடலாக இடம் பெற வேண்டும் என்பதற்காக கடைசி நேரத்தில் நேரமின்மையால் கிராபிக்ஸ் காட்சிகளை வைத்து எடுத்தோம் என்றும் இருப்பினும் அந்த பாடல் நல்ல பீலிங்கை ஏற்பட்டது என்றும் விஜய் ரசிகர்கள் இந்த பாடலால் அதிருப்தி அடைந்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் அஞ்சை தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் விஜய்யின் வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.