’வாரிசு’ இசை வெளியீடு. தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் படுகாயம்

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஸ்டேடியத்தில் உள்ளே செல்வதற்கு விஜய் ரசிகர்கள் தள்ளுமுள்ளு செய்ததால் போலீசார் படுகாயம் அடைந்துள்ளனர்.

விஜய் ரசிகர்கள் கட்டுக்கடங்காமல் காவல்துறையின் பாதுகாப்பையும் மீறி உள்ளே கூட்டமாக சென்றதாகவும் அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் ரசிகர்கள் காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி முரட்டுத்தனமாக காவலர்களை தள்ளிவிட்டு சென்று அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...