இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் ‘வாரிசு’ . இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அதே போல் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். அதோடு தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் நிறுவனம் வாரிசு’ படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தினை தெலுங்கில் வெளியிட பல்வேறு சிக்கல்கள் வரும் நிலையில் வருகின்ற 2023 பொங்கலை முன்னிட்டு இந்த படம் வெளியாக உள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்த சூழலில் சில தினங்களுக்கு முன் முன் வெளியான ரஞ்சிதமே, தீ தளபதி போன்ற பாடல்கள் இணையத்தில் வெளியாகி பம்பர் ஹிட் கொடுத்தது. தற்போது 3வது பாடல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதன் படி, ‘வாரிசு’ படத்தின் 3வது பாடலான அம்மா பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், பாடகி K.S.சித்ரா இப்பாடலை பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.