தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் நடித்த பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அதே போல் சரத்குமார், குஷ்பு, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் இப்படமானது வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ரஷ்சிதமே பாடலானது இணையவாசிதிகளை கவர்ந்து சுமார் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இந்த சூழலில் படத்தின் இரண்டாவது பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடலின் புரமோ வீடியோ டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.