எம்மாடியோ! வாரிசு VS துணிவு முதல் நாள் டிக்கெட் இவ்வளவா?

தென்னிந்திய சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித்.

இந்நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வருகின்ற 11-ம் தேதி விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய இரண்டு படங்களும் வெளியாக உள்ளது.

Varisu poster

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் மற்றும் அஜித் மோதுவதால் இரண்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பானது எகிற செய்துள்ளது என்றே கூறலாம்.

அதே சமயம் கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக தமிழகத்தில் துணிவு படத்திற்கு அதிக திரையரங்குகளும், வாரிசு படங்களுக்கு மிக குறைந்த திரையரங்கள் ஒதுக்கப்பட்டதால் வினியோகஸ்தாரர்கள் மத்தியில் சலசலப்பு நிலவியது.

thunivu movie updatenews360

இதனால் பாதிக்கு பாதி என்ற அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகிறது.

இந்த சூழலில் வாரிசு, துணிவு ஆகிய படங்களின் முதல் நாள் டிக்கெட் ரூ. 1000 என திரையரங்கு முன்னே விற்கப்படுவதால் ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஆயிரம் ரூபாய் கொடுக்க முன்வந்தும் டிக்கெட் கிடைக்கவில்லை என ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை பதிவு செய்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.