தளபதி விஜய் தற்போது தனது அடுத்த படமான வாரிசு படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. வாரிசு படத்தை வம்ஷி பைடிபள்ளி இயக்கியுள்ளார் மற்றும் சிறந்த இசை அமைப்பாளருக்கான முதல் தேசிய திரைப்பட விருதை பெற்ற தமன் எஸ் இசையமைத்துள்ளார்.
வாரிசுவின் முதல் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்,சமீபத்தில் 100 வது நாள் சூட்டிங் கொண்டாட்டத்தின் போது தளபதி விஜய்யுடன் ஒரு செல்ஃபி படத்தை செட்டில் இருந்து வெளியிட்டபோது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஆர் சரத் குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, குஷ்பு சுந்தர், சங்கீதா கிரிஷ், ஷாம், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் பலர் துணை நடிகர்களாக உள்ளனர்.
மேலும் இந்த படத்தில் விஜய்யின் நண்பர் ஸ்ரீமன் வாரிசு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார், மேலும் அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் நல்ல செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிலையில் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத்தில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது, படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதத்திற்கும் முடிக்க வேண்டும் என தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தற்போழுது வாரிசு படத்தின் ஷூட்டிங், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளது இயக்குனர் வம்சிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தான் காரணம்.
தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருவதால் ஒய்வு இல்லாத காரணத்தினால் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறிவருகின்றனர்.மருத்துவர்கள் ஒரு வாரம் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
பொன்னியின் செல்வன் படத்துக்கு முன்னதாகவே களமிறங்கும் தனுஷின் நானே வருவேன் படம்! தேதி தெரியுமா ?
இதற்கு காரணம் விஜய்யாகவும் இருக்கலாம் என பலர் தரப்பில் இருந்து கூறிவருகின்றனர், வாரிசு படம் பொங்கலுக்கு தான் திரைக்கு வருகிறது ஆனாலும் படப்பிடிப்பு ஒய்வு இல்லாமல் நடந்து வருகிறது. அதற்கு காரணம் விஜய் வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த மாதம் விஜய் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் படத்தில் இணைவதாலே இந்த அவசரம் என பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் வம்சி உடல்நலம் தேறி வந்த பின்னர் தான் மீண்டும் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளானர் படக்குழு.