நவராத்திரி நாளில் வழிபடக்கூடிய வராஹி காயத்ரி மந்திரம்

தற்போது நவராத்திரி திருநாள் நடைபெற்று வருகிறது. இந்த மந்திரத்தை நவராத்திரி மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம்.

இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்.

வாராகி அம்மன்

ஓம் ச்யாமளாயை விக்மஹே

ஹல ஹஸ்தாயை தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை தினந்தோறும் 108 முறை ஜபிப்பது சிறந்தது. இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும். பொதுவாகவே கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி இந்த 4 நட்சத்திரங்களை கொண்டவர்கள் வாராகி அம்மனை மனதார வழிபட்டாலே போதும். அவர்களுக்கு உடனடியாக பலன் கிடைத்துவிடும். இந்த நட்சத்திரம் இல்லாதவர்கள், இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் வாராகி அம்மனை வழிபடுவது சிறந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews