உச்சகட்ட எதிர்பார்ப்பு… வன்னியருக்கு 10.5% ஒதுக்கீடு வழக்கில் இன்று தீர்ப்பு!

வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், வன்னியர் சமூகத்தினருக்கு, 10.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் இயற்றியது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு இந்த சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என கூறி தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மற்றும் பாமக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் 15, 16-ம் தேதிகளில் நடந்தது. இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பை கடந்த மாதம் ௨௭ல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment