
News
வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து! தீர்ப்பால் ஏமாற்றத்தில் பாமக!!
வன்னியருக்கான 10.5% உள் ஒதுக்கீடு ரத்து! தீர்ப்பால் ஏமாற்றத்தில் பாமக!!
தினந்தோறும் சென்னை ஹைகோர்ட் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில் 10.5% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது. அதன்படி 10.5% உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து நீதிபதிகள் துரைசாமி முரளி சங்கர் அமர்வு அதிரடி தீர்ப்பளித்தனர். எம்.பி.சி பிரிவில் வன்னியருக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
ஜாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் உள்ஒதுக்கீடு வழங்கியது மிக தவறானது என்றும் கூறியுள்ளது. தீர்ப்பை நிறுத்தி வைக்கும்படி பாமகவினர் விடுத்த கோரிக்கையையும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நிராகரித்தது. 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கடந்த பிப்ரவரியில் சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டை எதிர்த்து பரமக்குடியை சேர்ந்த பாலமுரளி உட்பட 60 பேர் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்று ஹை கோர்ட் கூறியுள்ளது.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அரசு அளித்த விளக்கம் போதுமானதல்ல என்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனால் பாமகவினர் ஏமாற்றத்தில் உள்ளனர். ஒதுக்கீடு சட்டத்தை மீண்டும் கொண்டு வர கோரிக்கை என்று பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு வழக்கை மேல்முறையீடு செய்யும் என்பதை முழுமையாக நம்புகிறோம் என்றும் பாமக வழக்கறிஞர் பாலு கூறியுள்ளார். தமிழ் நாடு அரசு மேல்முறை செய்யும்போது தம்மையும் ஒருதரப்பாக பாஜக பாமக இணைத்துக்கொள்ளும் என்றும் பாமக தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
ஏற்கனவே இஸ்லாமிய சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். அருந்ததியர் சமூகத்தினருக்கும் உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இஸ்லாமியர் ,அருந்ததியர் சமூகத்திற்கு அளித்துள்ள உள் ஒதுக்கீடு சரி என்று உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. வன்னியர் ஒதுக்கீட்டின் கீழ் ஏற்கனவே கல்வி, வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பாதிக்கக் கூடாது என்றும் கூறினார் பாமக வழக்கறிஞர் பாலு.
