பிக்பாஸ் அல்டிமெட் தொடங்கி 3 வாரங்கள் ஆன நிலையில் முதல் இரண்டு வாரங்களில் கெத்து காட்டிய வனிதா மூன்றாவது வாரங்களில் கண்ணீர் விட்டு அழுது வருகிறார்.
என்னை வீட்டிற்கு அனுப்பிவிடுங்கள் என பிக்பாஸ்யிடமே கதறி அழுதுள்ளார். அவரை சமாதானப்படுத்த பிக்பாஸ் முயற்சித்த போதும் பிடிவாதமாக இருந்த வனிதாவை அக்ரிமெண்ட் குறித்து பேசி பிக்பாஸ் லைட்டாக மிரட்ட தொடங்கினார்.
ஆனால் அதையேல்லாம் என் வக்கீலை வைத்து பார்த்துகொள்வேன் என திருப்பி வனிதா கோபமாக கூறி என்னை வீட்டுக்கு அனுப்பியே ஆகவேண்டும் என கூற யோசிக்க பிக்பாஸ் டைம் கொடுத்துள்ளார்.
இதுபற்றி சக போட்டியாளர்களான சினேகன் மற்றும் தாடி பாலாஜியிடம் விளக்கமாக கூறி கொண்டிருந்தார். கமல்ஹாசன் தொகுப்பாளர் இல்லை என்பதால் மனம் உடைந்து புதிய தொகுப்பாளரை எதிர்கொள்ளாமல் பிக்பாஸ் அல்டிமெட் வீட்டைவிட்டு வெளியே போக முடிவு செய்துள்ளாராம்.
இதற்கு ரம்யாகிருஷ்ணன் வரப்போகிறார் என்ற என்னம் கூட இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் விவாதிக்கின்றனர். ஏற்கனவே பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் ரம்யாகிருஷ்ணனை சமாளிக்க முடியாமல் தான் வனிதா அதில் இருந்து விலகினார்.
தற்போது பிக்பாஸ் அல்டிமெட் நிகழ்ச்சிக்கு வரப்போகிறார் என்பதை நினைத்துதான் வனிதா இப்படி முடிவு செய்ததாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.