முழுசா வில்லியாக மாறிய வனிதா… இனிமே தான் வனிதாவின் ஆட்டம் ஆரம்பமாம்….
சில மாதங்களுக்கு முன்பு வரை வனிதா என்ற பெயர் தான் ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் ஆக்கிரமித்திருந்தது. எங்கு திரும்பினாலும் இந்த பெயர் தான். அந்த அளவிற்கு பல சர்ச்சைகளில் சிக்கி உலக புகழ் பெற்றவர் தான் நடிகை வனிதா. ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தோன்றிய இவர் சில காலம் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்தார்.
பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ், குக் வித் கோமாளி மற்றும் கலக்கப்போவது யாரு போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கினார். இந்த நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமான வனிதாவிற்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது.
அதனை தொடர்ந்து தற்போது வனிதா பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது வனிதா நடித்துள்ள படம் தான் தில்லு இருந்தா போராடு. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வனிதாவின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் கூறியதாவது, “சினிமாவில் எனக்கு கிடைத்த இடத்தை நான் கோட்டை விட்டுவிட்டேன். முட்டாள்தனம் பண்ணி விட்டேன். இதை மிக தாமதமாக உணர்ந்தேன். இனிமேல், விட்ட இடத்தை பிடிக்கப் போகிறேன். இந்த படத்தின் டைரக்டர் முரளிதரன் என்னிடம் வந்து கதை சொன்னபோது, பஞ்சாயத்து பரமேஸ்வரி என்ற வில்லி வேடத்தில் நடிக்க முடியுமா? என்று தயங்கி தயங்கி கேட்டார்.
உடனே நான் நடிக்கிறேன் என கூறி விட்டேன். வில்லி வேடத்தில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தொடர்ந்து வில்லியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். இனி வரும் காலங்களில் உலக மகா வில்லியாக தெரிவேன்” என கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள்ள நீங்க பண்ணாத வில்லத்தனமா அக்கா நீ கலக்குக்கா என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
