சமந்தாவுக்கு போட்டியாக களமிறங்கிய வனிதா…! என்ன செய்துள்ளார் தெரியுமா?

கோலிவுட் சினிமாவ பொருத்தவரைக்கும் சர்ச்சைக்கு பெயர் போன நடிகர்கள் நிறைய பேர் இருக்காங்க. அதிலும் மிகவும் முக்கியமான பிரபலம் என்றால் அது நடிகை வனிதா தான். இவங்கள தெரியாத ஆளே இருக்க முடியாது. அந்த அளவுக்கு இவங்க வேர்ல்டு பேமஸ். ஆமாங்க உண்மை தான்.

வனிதா

இதுவரைக்கும் வனிதா சிக்காத சர்ச்சையே கிடையாது. எத்தனை பிரச்சனை வந்தாலும் தனி ஆளா நின்னு சமாளிச்சிட்டு போய்கிட்டே இருப்பாங்க. சமீபகாலமாக பிரச்சனைகள் வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் வனிதா படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது வனிதா நடிகர் பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பாலிவுட் ரீமேக் படமான அந்தகன் படத்திலும், பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து பிக்கப் டிராப் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்து வருகிறார். இதுதவிர யூடியூப் சேனல் ஒன்றையும் வனிதா நடத்தி வருகிறார்.

இந்நிலையில், வனிதா காத்து என்ற புதிய தமிழ் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளாராம். இந்த பாடலுக்காக மேக்கப்புடன் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வனிதா அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அதுமட்டும் இல்லைங்க சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்நிலையில் சமந்தாவின் பாடலுக்கு போட்டியாக வனிதாவின் இந்த பாடல் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment