Entertainment
பட்டிமன்ற டாஸ்க்கில் கவின்- சாண்டி அணியை வீழ்த்திய வனிதா அணி!!
விஜய் தொலைக்காட்சியில், பிக் பாஸ் 3 நிகழ்ச்சி சண்டைக் களமாக போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் 30 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், 8 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர்.
இந்த வாரத்திற்கான தலையணை தயாரித்தல் டாஸ்க்கின் 2 ஆம் பகுதி நேற்றும் தொடர்ந்தது.

வனிதா அண்ட் டீம் தயாரித்த 16 தலையணையில், 11 தேர்வு செய்யப்பட்டது. இவர்களின் மொத்த மதிப்பெண் 18 ஆகும். லோஸ்லியா அண்ட் டீம் தயாரித்த 11 தலையணைகளில் 6 மட்டுமே தேர்வு செய்யப்பட்டது. அவர்களின் மொத்த மதிப்பெண் 9 மதிப்பெண்கள் ஆகும்.
அதனால் வனிதா அண்ட் டீம் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது, அதன்பின்னர் பட்டிமன்றம் நடத்தப்பட்டது. தலையணை டாஸ்க்கிற்கு பிரிக்கப்பட்டே அணிகளே மீண்டும் தொடர்ந்தது.
அபிராமி, சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் நடுவர்களாக நியமிக்கப்பட்டனர், கொடுக்கும் தலைப்பிற்கு வனிதா அணியினர் எதிராகவும், கவின் அணியினர் ஆதரவாகவும் பேசும்படியாக கூறப்பட்டது.
3 விதமான தலைப்புகளையும் சரியாக விவாதம் செய்த வனிதா அணியினர் வெற்றி பெற்ற அணி என அறிவிக்கப்பட்டது. வி ஆர் த பாய்ஸ் அணி எப்பவும் வெத்து தான் என்பதனை நிரூபிப்பார்கள், புறணி பேசும் டாஸ்க் வைத்தால் நிச்சயம் பரிசு கவின்- சாண்டி அணிக்குத் தான் என்ற கருத்துகள் வலம் வருகின்றன.
