Entertainment
தலைவர் போட்டிக்கு தேர்வான வனிதா!!!
நேற்று முன் தினம் நடைபெற்ற நிகழ்ச்சி பாதி முடிவடைந்தநிலையில், அதன் பாதியிலிருந்து துவங்கியது. அதில் நேற்றைய தினத்தில் சேரன், லாஸ்லியா, வனிதா ஆகியோர் இந்த போட்டியின் டைட்டில் வின்னராக வர தங்களுக்கு இருக்கும் வாய்ப்புகள் பற்றிக் கூறினார்கள்.
சேரன் பேசிய போது, பிக் பாஸ் நிகழ்ச்சியானது யூடியூப்பில் வெளிவரும் ஒரு சாதாரண நிகழ்ச்சி போன்றதல்ல, ஒட்டுமொத்தக் குடும்பமும் உட்கார்ந்து பார்க்கும் ஒரு நிகழ்ச்சி என்று மனம் உருகக் கூறினார்.

அவருக்கு அடுத்து பேசிய வனிதா, “நிச்சயம் என்னால் டைட்டிலை வின் பண்ண முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அப்போது கவின் நீங்கள் செய்த தவறை உணர்ந்து அதற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறீர்களா என்று கேட்க, அவர் இல்லை, கேட்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன்பின்னர், வெளியே சென்று நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர், கேட்க தோன்றவில்லை என்பதுபோலக் கூறினார்.
இந்த டாஸ்க்கில், அனைத்து போட்டியாளர்களும் மிகச் சிறப்பாக கேள்விகள் கேட்டிருந்தாலும், அதில் வனிதாவின் கேள்விகள் அதிரடியாக இருந்ததால், அவர் அடுத்த வாரத்திற்கான தலைவர் பதவிக்கு போட்டியிட நேரடியாக தகுதி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது.
