விஜய் டிவியில் இருந்து வெளியேறிய வனிதா: கலர்ஸ் டிவியில் ஐக்கியம்!

075e1cd002566c0e8d587fa1923ed718

சமீபத்தில் விஜய் டிவியில் இருந்து வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது கலர்ஸ் டிவியில் ஐக்கியமாகி உள்ளதாக தகவல் வெளிவந்தது

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதாவுக்கும் அந்த நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி உள்பட விஜய் டிவியில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் இருந்து வனிதா  வெளியேறினார் 

இந்த நிலையில் தற்போது அவர் கலர்ஸ் டிவியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஷகிலா, ரோபோ சங்கர், மதுமிதா உள்பட பலர் கலந்து கொண்டு இருக்கும் கன்னித்தீவு என்ற நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வனிதா கலந்து கொண்டார். இது குறித்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

இந்த நிலையில் திரை உலகிலும் வனிதா விஜயகுமார் பிசியாக உள்ளார் என்பதும் பவர்ஸ்டார் சீனுவாசனுடன் அவர் நடித்து வரும் ‘பிக்கப் டிராப்’ உள்பட மூன்று படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.