ப்பா… என்ன வார்த்த! சினேகன் மனதை புண்படுத்திய வனிதா! என்ன கேட்டாங்க தெரியுமா?

பிக்பாஸ் விட அல்டிமேட் தான் வேற லெவல் அல்டிமேட் ஆக ஓடிக்கொண்டு காணப்படுகிறது. பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கி மூன்று நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் தினம்தோறும் அங்கு சுவாரசியமான சண்டைகளும் புதுப்புது கலாட்டாக்களும் அரங்கேறிக் கொண்டுதான் வருகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் தொடங்கிய முதல் நாளே நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. குறிப்பாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த பிக்பாஸில் மிகவும் பெயர் பெற்ற வனிதா விஜயகுமார் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இவரை மையமாக கொண்டு நாள்தோறும் பல்வேறு பிரச்சினைகளும் சுவாரசியமான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகிறது.

அந்த வரிசையில் இன்றைய தினம் பிக்பாஸ், செலிபிரிட்டி பிரஸ்மீட் ஒன்றை ஏற்பாடு செய்தது. அதில் ஒரு குழுவினர் பத்திரிக்கையாளர்களாக, ஒரு குழுவினர் செலிபிரிட்டிகளாக அமர்ந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு போட்டியாளரும் செலிபிரிட்டி சேரில் உட்காரும்போது பத்திரிகையாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்பார்கள்.

அந்த வரிசையில் செலிபிரிட்டி சேரில் உட்காரும் வனிதா விஜயகுமார் பத்திரிக்கையாளர்கள் திக்குமுக்காட வைக்கும் வகையில் திருப்பி கேள்வி கேட்டுள்ளார். அவர் வேறு யாரும் கேட்கவில்லை சிநேகனை கேட்டுள்ளார்.

நீங்களெல்லாமே கேம் காக தான அப்படின்னு சினேகன் ஒரு புறம் கேட்க, நீங்க உங்க பொண்டாட்டி விட்டுட்டு ஏன் வந்தீர்கள் என்று சினேகன் திருப்பி கேட்டுள்ளார். ஏற்கனவே சினேகன் திருமணமாகி ஆறு மாதம் கூட நிறைவு பெறாத நிலையில் அவர் சோகத்தில் இருந்த போது இவ்வாறு வனிதா விஜயகுமார் கேட்டது பிக்பாஸ் குடும்பத்தில் மட்டுமில்லாமல் பார்க்கும் பார்வையாளர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

மேலும் உங்களுக்காக...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment