கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல்நாளே பிரச்சனைகளோடு தான் தொடங்கியது.
எவ்வித தொடர்பும் இல்லாமல் ஒரு வீட்டிற்குள் இருக்கும் சக போட்டியாளர்களுக்குள் நடக்கும் முட்டலும் மோதலுமே இந்நிச்சியின் முக்கிய கருவாக அமைந்து வருகிறது.
அந்த வகையில் ஒரு ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் திருடன், போலீஸ் விளையாட்டை விளையாடி வருகின்றனர்.
அதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதலும், வாக்குவாதமும் ஏற்படுகிறது. அந்த வகையில் எப்படி நாம பிரச்சனையை கிளப்பி குளிர்காயலாம் என நினைக்கும் வனிதா இன்று ஜூலியுடன் தன் ஆட்டத்தை தொடங்கிவிட்டார்.
அதில் போலீசாக இருக்கும் ஜூலியிடம், வனிதா கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பத்திரமாக இருக்க வேண்டும். இந்த டிராமா கம்பெனி எல்லாம் இருந்தா எல்லாத்தையும் உடைத்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
மேலும், ஜூலியை மூடிட்டு போ, வாய மூடு, பைத்தியம் போன்ற வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் ஜூலியை இவ்வளவு இளக்காரமாகப் பார்க்கும் போட்டியாளர்களை கண்டபடி திட்டி தீர்க்கின்றனர்.