வெளியேறிய வீடியோவை பார்த்து வெறியாகிய வனிதா! என்ன ஆகுமோ பிக்பாஸ் அல்டிமேட்?
இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தமிழகத்தில் பிக் பாஸ் சீசன் 5 நிறைவு பெற்றது . இதில் பிக் பாஸ் வின்னராக ராஜு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தினைப் பிரியங்கா பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிறைவு பெற்றது பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை அளித்த நிலையில் களமிறங்கியது பிக் பாஸ் அல்டிமேட். இந்த பிக்பாஸ் அல்டிமேட்டில் முதல் ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றுள் குறிப்பாக பிக் பாஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட ஜூலி பற்றி புரோமோ வெளியானது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 மிகவும் பேமஸ் ஆக ஓடியதற்கு முக்கிய காரணமாக இருந்த வனிதா விஜயகுமார் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொள்ளவுள்ளார்.
அதற்கான வெளியானது. அந்தப் புரோமோ வில் தான் வெளியேறிய நாமினேசன் கார்டை மறுபடி மறுபடி பார்த்துக்கொண்டு வெறியாகியுள்ளதாக காணப்படுகிறது. இதனால் பிக்பாஸ் அல்டிமேட்டில் இவரால் தரமான சம்பவங்கள் நிகழும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டுள்ளனர்.
