Entertainment
கவின்- லாஸ்லியா காதலைப் பற்றி கேள்வி கேட்ட வனிதா!!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நோக்கி வீறுநடை போடுகிறது. வந்த அனைவரும் வந்த நோக்கத்தினை மறந்துவிட்டனர், முக்கியமாக கவின் மீது காதல் கொண்ட லாஸ்லியா தான் ஒரு போட்டியாளர் என்பதையும், வந்து கலந்திருப்பது போட்டி என்பதையும் மறந்துவிட்டார்.
விறுவிறுப்பை எல்லாம் தூக்கி ஓரம் கட்டிவிட்டு காதல், பாசம் என தமிழ் சினிமா போல் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ், நேற்றைய நிகழ்ச்சியும் வழக்கம்போல் ஆரம்பமானது.

நேற்று மாலை ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. ரெட் அணி, புளூ அணி என்று இரு அணிகளாக பிரிக்கப்பட்டது. அதாவது பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்க உங்களுக்கு தகுதி இருக்கிறதா? என்ற கேள்வி ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட்டது.
நிச்சயம் எனக்கு அந்த தகுதி இருக்கிறது என்பதுபோல கவின் பேசினார்.
ஆனால் அவர் சீக்கிரம் வெளியேறிவிடுவார் என்பது அவருக்கு தெரிந்த ஒன்று என்பது நாம் அறிந்ததே ஆகும்.
அப்போது கவினை கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் வனிதா கவின்- லாஸ்லியாவின் புனிதமான காதலைப் பற்றிப் பேசினார். அப்போது லோஸ்லியா நண்பர்கள் பற்றி மட்டுமே பேசுங்கள். என்னையும், அவரையும் பேசாதீர்கள் என்பதுபோலக் கூறினார்.
