Entertainment
வனிதாவுக்கு அடுத்தபடியாக மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்
வனிதா விஜயகுமார் தனக்கு பிறந்த இரண்டாவது கணவரின் குழந்தையை கடத்தி வந்து விட்டதாகவும் அவரை தேடி தெலுங்கானா போலீஸ் வந்திருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது பிக்பாஸில் கலந்து கொள்ளும் மற்றொரு பிரபலமான மீரா மிதுனுன் புகாரில் சிக்கியுள்ளார்.

பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தியாகராய நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் தந்த புகாரில் அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிக் பாஸில் பங்கேற்றுள்ளதால் நிகழ்ச்சி முடிந்தபின் ஆஜராவதாக மீரா மிதுன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
