அதிர்ச்சி! வெண்ணிலா கபடிக் குழு துணை நடிகர் மரணம்..!!

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் துணை நடைகராக நடித்த ஹரி வைரவன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இவர் நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம், வெண்ணிலா கபடிக்குழு போன்ற படங்களில் துணை நடிகராக நடித்தவர் ஹரி வைரவன். இவர் சமீபத்தில் உடல் நலம்பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவரது மனைவி கவனித்து வந்த நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் தன்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என கூறியது அனைவரையும் கலங்க வைத்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அதிகாலை 12.30 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரண செய்தியை கேட்ட சக நடிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அவரது சொந்த ஊரான மதுரையில் இறுதி சடங்கு நடைபெறும் எனவும் அவருடம் பணியாற்றிய சக நடிகர்கள் இறுதி அஞ்சலியில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.