Entertainment
பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை விபச்சார வழக்கில் கைது
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த சில வருடங்களாக பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘வாணி ராணி’. ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த சீரியலில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிப்பவர் நடிகை சங்கீதா. இவர் இன்று விபச்சார வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அருகே உள்ள பனையூர் என்ற பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து சென்னை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தனியார் ரிசார்ட் ஒன்றில் நடிகை சங்கீதா இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சங்கீதா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. சங்கீதாவால் விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட இளம் பெண்களை மீட்ட காவல்துறையினர் அவர்களை மகளிர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். மீட்கப்பட்டவர்களில் இரண்டு சின்னத்திரை நடிகைகள் இருப்பதாக கூறப்படுகிறது
