அவர் திரும்பவே இல்லை.. பரத்த பளார்னு அடிச்சிட்டேன்.. வாணி போஜன் பகிர்ந்த தகவல்..!!

Vani Bhojan: காதல் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக திரையுலகில் அறிமுகம் ஆனவர் பரத். 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தின் மூலம் பிரபலமான இவர் தமிழ் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

2023 ஜூலை மாதம் 28ஆம் தேதி பரத் நடிப்பில் வெளியான படம் லவ். இந்த படத்தில் வாணி போஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இதற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டு வெளியான மிரள் படத்திலும் பரத்தும் வாணி போஜனும் இணைந்து நடித்திருந்தனர்.

ஒரு படம் மூன்று கதாநாயகிகள் ஒரே பாட்டில் மூன்று விதமாக பாடிய எஸ் ஜானகி!

இந்த படத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் ஈகோ சண்டை குடும்ப பிரச்சினை போன்றவற்றை மையமாக வைத்து அது எப்படி ஒரு மிகப்பெரிய வன்முறையாக மாறுகிறது என்பதை காட்டியிருப்பார்கள்.

அப்படி இந்த படத்தில் கணவன் மனைவியான பரத் வாணி போஜன் இருவரும் சண்டையிடும் போது நடந்த ஒரு சம்பவம் பற்றி வாணி போஜன் பகிர்ந்துள்ளார். பரத் வாணி போஜன் இருவருக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தபோது வாணி போஜன் பரத்தை ஒரு அறையில் கீழே விழ செய்து இருப்பார்.

பதினைந்தே நாள்களில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற சிவாஜி படம் இதுதான்..!

ஆனால் அந்த காட்சியில் பரத்தை வாணி போஜன் உண்மையில் அறைந்துள்ளார். இரண்டு மூன்று முறை பலமாக வாணி போஜன் பரத்தின் கன்னத்தில் அறைந்துள்ளார் ஆனால் அவர் திரும்ப கூட இல்லையாம்.  அப்போதே அவரது முகம் சிவந்ததை பார்த்து வாணி போஜன் சற்று பயந்துள்ளார்.

அடுத்த காட்சிக்கு முகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை நினைத்து. அப்போது கேமராவில் கை தெரியும் படி ஓங்கி அறைய வேண்டும் என்று இயக்குனர் கூறியதால் வாணி போஜனும் ஓங்கி ஒரு அறை பரத்திற்கு கொடுத்துள்ளார்.

நண்பன் படம்.. இவ்வளவு நீள டயலாக்.. விஜய் ஒரே டேக்கில் முடிச்சாராம்..!!

இதில் பரத் நிலை தடுமாறி கீழே விழுந்ததை அப்படியே காட்சி ஆக்கி இருந்தனர். ஆக அந்த ஒரு காட்சிக்காக பரத் வாணி போஜனிடம் அத்தனை அறை வாங்கியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.