தமிழ் சினிமா மற்றும் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம் என உள்ளிட்டோர் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த பிரமாண்ட படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து 500 கோடி என்ற மிக பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ .ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவரும் எதிர்பார்த்த இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கி கலக்கி வருகிறது. அதன்படி படத்தின் முதல் பாடலான “பொன்னி நதி” என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.
இதன் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரபல மாலில், நடத்தி ரசிகர்கள் முன்னிலையில் இந்த பாடலை வெளியிடப்பட்டது படக்குழு. அதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி,ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கார்த்தி அந்த கதாபாத்திற்கும் தனக்கும் இருக்கும் ஒரு சில ஒற்றுமை உள்ளது என பேசியுள்ளார். அதில் “வந்தியத்தேவனுக்கு சிறப்பு என்னவென்றால் ஒரு மீன் விற்கும் பெண்ணிடம் சகஜமாக பேசுவான்.
இந்தியன் 2 படத்தில் கமல் ஜோடியாகும் நடிகை யாரு தெரியுமா? நம்ம ரஜினி ஹீரோயின் தான்!
இளவரசி கிட்டயும் அதே போலத்தான் பேசுவான் எல்லாருக்கும் இணையாக ரூட் போடுவான். யார் என்ற பாகுபாடு கிடையாது, எல்லாரையும் இணையாக காதலிப்பான். என் மனைவி மட்டும் இதனை பார்க்காமல் இருந்தால் சரி” என கலகலப்பாக பேசியுள்ளார்.