மீண்டும் விபத்தில் சிக்கிய வந்தே பாரத் ரயில்.. மீண்டும் மாடு மீது மோதியதால் பரபரப்பு!

இந்தியாவின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் என்ற ரயில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பாக சென்னையில் இருந்து மைசூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சென்னை மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது என்பது தெரிந்ததே.

இந்நிலையில் வந்தே பாரத் ரயில்கள் அதி வேகமாக செல்வதும், அவ்வப்போது மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருவதாக வெளி வந்திருக்கும் செய்தியைப் பார்த்து வருகிறோம்.

vandhe bharathஇந்த நிலையில் ஏற்கனவே 3 வந்தே பாரத் ரயில் ரயில் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் மாடுகள் மீது மோதி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று குஜராத் மாநிலத்தில் வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வந்தே பாரத் ரயில் மாடு மீது மோதியது. இதனை அடுத்து வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சிறிதளவு சேதம் அடைந்ததாகவும், உடனடியாக அந்த ரயில் சர்வீஸ் செய்யப்பட்டு கிளம்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வந்தே பாரத் ரயில் மீது மோதிய மாடுகளின் நிலை என்ன என்பது குறித்த தகவல் இல்லை. இந்த நிலையில் ரயில் தண்டவாளம் அருகே மாடுகள் உள்பட கால்நடைகளை மேய விடும் விலங்குகளின் சொந்தக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நான்கு முறை மோதிய வந்தே பாரத் ரயில் தற்போது மீண்டும் ஒரு முறை மோதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.