வந்தே பாரத் ரயிலில் செல்பி எடுக்க ஆசைப்பட்ட இளைஞர்.. ரூ.6000 பறிபோன சோக சம்பவம்

வந்தே பாரத் ரயிலில் ஏறி செல்பி எடுக்க ஆசைப்பட்ட ஒருவர் ரூபாய் 6000 இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் அதிவேக ரயில்களில் ஒன்றான வந்தே பாரத் ரயில் தற்போது நாடு முழுவதும் இயங்கி வருகிறது என்பதை தெரிந்ததே.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்ற ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் வந்த போது அதனுள் ஏறி செல்பி எடுக்க ஒருவர் முயற்சி செய்தார்

ஆனால் அவர் செல்பி எடுத்து வெளியே வருவதற்குள் ரயிலில் உள்ள தானியங்கி கதவு மூடிவிட்டது. இதனை அடுத்து வேறு வழியின்றி அவர் அடுத்த ரயில் நிலையம் ஆன விஜயவாடா வரை பயணம் செய்தார்

இந்த நிலையில் டிக்கெட் பரிசோதரர் வந்தபோது அந்த நபரிடம் டிக்கெட் இல்லை என்பதால் அவர் அபராத தொகை ரூபாய் 6000 செலுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. செல்பி எடுக்க ஆசைப்பட்டு 6000 ரூபாய் இழந்த ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.