Connect with us

வந்தே மாதரம் கோஷம்: மகிழ்ச்சியில் ஆப்கன் இந்தியர்கள்!

News

வந்தே மாதரம் கோஷம்: மகிழ்ச்சியில் ஆப்கன் இந்தியர்கள்!

1b82f7d19285a2f138f45e3fdf2c24e7

ஆப்கானிஸ்தான் நாட்டில் வாழ்ந்து வந்த இந்தியர்கள் தற்போது இந்தியா திரும்பிய நிலையில் மகிழ்ச்சியில் வந்தேமாதரம் என்று கோஷமிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலையில் அந்நாட்டின் அதிபர் மற்றும் துணை அதிபர் நாட்டை விட்டு ஓடி விட்டனர். இந்த நிலையில் தாலிபான்கள் ஆட்சியின் கொடுமையை தாங்க முடியாது என்ற எண்ணத்தில் அந்நாட்டிலிருந்து உள்நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர்.

அந்த வகையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் வந்தேமாதரம் என்றும் பாரத மாதா கி ஜே என்றும் கோஷமிட்டு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து 120 க்கும் மேற்பட்ட இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் இன்று டெல்லி வந்தது டெல்லி திரும்பிய உடன் அவர்கள் வந்தேமாதரம் என்று கோஷமிட்டனர். 

மேலும் இனிமேல் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு செல்ல மாட்டோம் என்றும் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top