விசிலிலேயே வந்தே மாதரம் பாடி ஆல்பம் வெளியிட்ட சாதனை நபர்

47ee33f7ee7315193412c95f838e19ec

ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும் சிலரின் திறமை அளவிட முடியாதது எல்லை இல்லாதது. அந்த வகையில் சென்னையை சேர்ந்த ராஜேஸ் என்ற கட்டிட பொறியாளருக்கு இருக்கும் திறமை அபாரமானது. சினிமா பாடல்களை ஆரம்பத்தில் விசில் மூலம் பொழுது போக்கிற்காக பாடிய இவர் அதை மிகுந்த பெர்பெக்‌ஷனோடு சுவைபட செய்ய ஆரம்பித்தார்.

எல்லா பாடல்களையும் எந்த பிசிறும் இல்லாமல் அந்த பாடலின் இசை நடைக்கேற்ப விசிலுடன் பாடக்கூடிய அபார திறமை பெற்றவர். இவரின் சேனலில் அனைத்து பாடல்களையும் விசிலிலேயே பாடி பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த வகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டும் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டும் பதக்கம் பெற்றும் திரும்பிய வீரர்களை பாராட்டும் வகையிலும் அவர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் வந்தே மாதரம் பாடலை விசிலிலேயே பாடி அசத்தியுள்ளார். அதை தனி ஆல்பமாகவும் வெளியிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.