சென்னை சென்ட்ரல் மற்றும் கோவை இடையே வந்தே பாரத் ரயில் ஓட்டம் இன்று நடைபெற்றது.. எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு ரயில் புறப்பட்டு கோவை வந்தடைந்தது.
ரெயில்வேயின் தொழில்நுட்ப கோளாறுகள் குறித்த ஆய்வு முன்னோட்ட பயணத்தில் மேற்கொள்ளப்பட்டது.
சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்.இது 11வது ரயில் சேவையாகும்.
அரசு ஐடிஐ மாணவர்களுக்கு 76 சதவீத வேலைவாய்ப்பு – தொழிலாளர் துறை
ரயில்வே அதிகாரிகளின் கூற்றுப்படி, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிநவீன பயணிகள் வசதிகளுடன் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு வேகமான, வசதியான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்கும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.