வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்: பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!

குஜராத் தலைநகரான காந்தி நகரில் இருந்து மும்பை வரையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது முக்கிய வழித்தடங்களில் இருப்பதாகவும், தற்போது காந்தி நகரில் பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

இதனிடையே அதிக கட்டணம் இருந்த போதிலும், மக்கள் விரும்பி பயணம் செய்வார்கள் என கருதப்படுகிறது. இதன் காரணமாக பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டுகிறது.

அதே போல் வந்தே பாரத் ரயிலானது 52 நொடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டியுள்ளதாக சில தினங்களுக்கு முன் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

மேலும், இதுவரையில் இல்லாத அதிகபட்ச வேகத்தில் இயங்கக் கூடிய வந்தே பாரத் ரயிலில் சோதனை ஓட்டமானது நடைப்பெற்ற நிலையில் தற்போது தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment