Connect with us

வண்டலூர் – மீஞ்சூர் ரோட்டில் சுங்கக் கட்டணம் உயர்வு!!! எவ்வளவு தெரியுமா?

820206

தமிழகம்

வண்டலூர் – மீஞ்சூர் ரோட்டில் சுங்கக் கட்டணம் உயர்வு!!! எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மாதந்தோறும் சுங்கக் கட்டணத்தை உயர்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில்  வண்டலூர் -மீஞ்சூர் வெளி வட்டச் சாலையில் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்த்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வரதராஜபுரம் சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 50 ரூபாய் முதல் 323 ரூபாய் வரையில் வசூலிப்பதாகவும், இது மாதம் முழுவதும் பயணிக்க வேண்டும் என்ற பட்சத்தில் ரூ.2923 முதல் ரூ.18,890 வரையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் கோலப்பன் சேரி சுங்கச்சாவடியில் முதல் சென்று வர 21 ரூபாய் முதல் 115 ரூபாய் வரையில் வசூலிப்பதாகவும், இது மாதம் முழுவதும் பயணிக்க வேண்டும் என்ற பட்சத்தில் ரூ.1225 முதல் ரூ.7913 வரையில் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பாலவேடு சங்கச்சாவடியில் முதல் சென்று வருவதற்கு ரூ.27 முதல் ரூ.173 வரையிலும் மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கு ரூ.1577 முதல் ரூ.10,192 வரையில் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சின்ன முல்லை வாயில் சுங்கச்சாவடியில் முதல் சென்று வர ரூ.18 முதல் ரூ. 119 வரையிலும் மாதம் முழுவதும் பயணம் செய்வதற்கு 1080 ரூபாய் முதல் 6976 ரூபாய் வரையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top