News
கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் தனது வேட்பு மனு தாக்கல்!
சட்டமன்ற தேர்தல் நெருங்கி நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் மிகவும் பயங்கரமாக நடைபெற்று வருகிறது.மத்தியில் ஆளும் கட்சியான பாஜக கட்சியானது தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுகவுடன் கூட்டணியில் உள்ளது. மேலும் அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கோவை தெற்கு தொகுதியில் அதிமுக பாஜகவிற்கு வழங்கியது.

அந்த கோவை தெற்கு தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட வானதி சீனிவாசன் இந்த முறையும் போட்டியிட உள்ளதாக பாஜக தரப்பில் அறிவித்தது. அதை தொடர்ந்து தற்போது வானதி சீனிவாசன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் இந்த கோவை தெற்கு தொகுதியில் உலகநாயகன் என்று அழைக்கப்படும் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியானது. கமலஹாசனும் இன்றைய தினமே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
