Connect with us

வணக்கம். இன்றைய தினத்திற்கான பட்ஜெட் இதோடு நிறைவு..; மீண்டும் நாளை 10 மணிக்கு-சட்டப்பேரவையில்…..

ptr

Tamil Nadu

வணக்கம். இன்றைய தினத்திற்கான பட்ஜெட் இதோடு நிறைவு..; மீண்டும் நாளை 10 மணிக்கு-சட்டப்பேரவையில்…..

வணக்கம். இன்றைய தினத்திற்கான பட்ஜெட் இதோடு நிறைவு..; மீண்டும் நாளை 10 மணிக்கு-சட்டப்பேரவையில்…..

இன்றைய தினம் சட்டப்பேரவையில் 2022 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இது தமிழக அரசின் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்ஜெட் தற்போதைய தமிழகத்தின் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அவர் கல்வி, வேளாண்மை, மருத்துவம், கட்டிடக்கலை, அகழ்வாராய்ச்சி, தொல்லியல் ஆராய்ச்சி உள்ளிட்ட பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டினை அறிவித்தார். வட்டியில்லா பயிர்க்கடன் திட்டம், நகை கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் உள்ளிட்ட  பல துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டை அவர் அறிவித்தார். புதிதாக 500 எலக்ட்ரிக் பஸ் வாங்க உள்ளதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான பட்ஜெட் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. அதன்படி இறுதியில் இன்றைய நாளுக்கான பட்ஜெட் இத்தோடு நிறைவு பெறுகிறது என்று பழனிவேல் தியாகராஜன் வணக்கம் சொல்லிவிட்டு உரையை முடித்தார். மேலும் நாளை காலை மீண்டும் சட்டப்பேரவையில் 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top