வனதுர்கை என்பவள் யார்

நாம் செய்யும் பாவங்களை போக்குபவளே வனதுர்க்கையாவாள். லலிதா சகஸ்ரநாமம் இவளின் சிறப்புகளை கூறுகிறது.

பாண்டவர்கள் ஒரு முறை வன்னி மரத்தடியில் தான் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து பூஜித்தார்கள்.

வனதுர்க்கை தேவியை ஒன்பது நாட்கள் வழிபட்டனர். தசமி தினத்தன்றுதான் இவர்கள் தங்கள் ஆயுதங்களை எடுத்துக்கொண்டனர்.

அர்ஜூனனுக்கு இன்னொரு பெயர் விஜயன். வில்வித்தையில் சிறந்தவனான அர்ஜூனனை வில்லுக்கு விஜயன் என்று அழைப்பதுண்டு.

விஜயம் தரும் தசமி அன்று விஜயன் எனப்படும் அர்ஜீனனால் ஆயுதங்கள் பூஜிக்கப்பட்டதால்தான் இது விஜயதசமி என அழைக்கப்படுகிறது.

இவளை வணங்குவதை விஜய நவராத்திரி என்று சொல்கிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews