Connect with us

தற்போது நம் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது “வால்பாறை”!!

News

தற்போது நம் தமிழ்நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது “வால்பாறை”!!

8efd99a2431c44ff54259f21a46a1053

தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. இது தமிழகத்தில் உள்ள மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது மிகுந்த சந்தோசத்தை அளிப்பதாக காணப்படுகிறது. இது  தொடர்ந்து தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஆங்காங்கே மழை பெய்து கொண்டு வருகிறது.d60cccbdbc56c903c701cb596bfabf75

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிகபட்ச மழை பதிவானது வால்பாறை பகுதியில் பெய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வால்பாறை மட்டுமில்லாமல் சின்னக்கல்லார் பகுதியும் 4 சென்டி மீட்டர்  மழை பெற்றுள்ளது.

அதைத்தொடர்ந்து குழித்துறை அவலாஞ்சியில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பூதபாண்டி பந்தலூரில் தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. சென்னை விமான நிலையம்,  ராதாபுரம், தொழுதூரில் தலா ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வெளியாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top